In search of the emotions that colour life and imprint the beauty of experience!

Saturday, August 5, 2017

எனக்கே எனக்காக..


சிட்டு குட்டியின் துறுதுறு விளையாட்டு இல்லா வீட்டில்  
சாவி கொண்டு, தானே உள் நுழைகிறேன்.
அவன் இனிய ரீங்காரம் கேட்காமலும், 
அவன் தாயின் அன்பு குரல் இல்லாமலும்,
அவன் தந்தையின் நேர்த்தியான செயலற்ற வீட்டில் 
பெருத்த அமைதி வரவேற்கிறது!

புதிய தேசத்தின் மௌனம் கனமாக நிரம்பி வழிய 
தேடி வந்த நாட்டின் குளிர், அறையினுள் பரவுகிறது.
நினைவுகளை மெல்ல அசைபோடுகிறேன்..
உறவுகளும் நட்புகளும் வெகு தொலைவில் இருக்க 
நான் இங்கு தனியே..

வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லாதபொழுதும் 
காணாத அனுபவத்தை தேடி 
புதிய வாசத்தை நுகர,
இங்கு நான் :)

இதோ எனக்கான 'என்' நாட்கள் தொடங்கிற்று...

அடிபுல் ருசிக்க,
ஆனந்த குரலிசைக்க,
களித்து வாழ ,
நுரையீரல் முழுதும் காற்று நிரப்ப  
வேறு உலகம் அறிய- என 
எத்தனை எத்தனை குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன் :D 

நிலையானதும்,
சரியென்றும் தவறென்று 
எதுவும் எப்பொழுதும் கிடையாதே!
வாழ்ந்து தான் பார்க்கிறேன்
எனக்கே எனக்கான நாட்களை...

No comments:

Post a Comment