நினைவு தெரிஞ்சதிலிருந்து இப்போது வரை, தியேட்டர்ல படம் பார்க்கறது போல கன்சிஸ்டெண்ட் ஆனா (சோம்பேறித்தனமான )பொழுது போக்கு வேற எதுவும் இல்லை.
தெருவுக்கு தெரு சினிமா தியேட்டர் இருக்குற ஊர்ல பொறந்து வளர்ந்ததாலோ என்னவோ, தியேட்டர்ல சினிமா பார்க்கற அனுபவம் அப்பவும் இப்பவும் ரொம்ப பிடித்தமான ஒன்று. 10 மாச குழந்தையா இருந்ததிலிருந்து தியேட்டர் போறேனாமாம் ;) ஹிஹி
அப்பறம் வளர்ந்த பின்னே சோத்து மூட்டையெல்லாம் கட்டிட்டு போய் சினிமா பார்த்த அனுபவம் ரெண்டு மூணு இருக்குது...
கிட்டத்தட்ட எல்லா நட்புகளையும் சினிமாவுக்கு இழுத்துட்டு போயிருக்கேன். நண்பர்கள் எல்லாம் நம்மள மாதிரி தானே இருப்பாங்க!
எவ்வளோ பிடிக்கிற அனுபவமா இருந்தாலும், தனியா தியேட்டர் போறதுக்கு மட்டும் ஒத்துவரவே இல்லை, இந்த மண்டை! கறிக்கடை, மீன் மார்க்கெட்க்கெல்லாம் தனியா போயிருந்தாலும் சினிமா தியேட்டர்னு வரும்போது மட்டும், போகணுமானு யோசிச்சு பல படங்களை தவறவிட்டிருக்கேன்.
இப்படியே இருந்தா எப்படி உருப்படறதுனு ஒரு லீவு நாளா பார்த்து, வீட்டுல யார்கிட்டேயும் சொல்லாம கிளம்பியாச்சு ராயப்பேட்டைக்கு !
சத்யம் 6-சீசென்ஸ்ல குற்றமே தண்டனை படம்; எத்தனை தியேட்டர்ல படம் பார்த்தாலும், சத்யம் காம்ப்லெஸ்ல இருக்கிற சுகம் போல வேற எங்கேயும் வருமா? என்ன குஷின்ஸ் , என்ன ஆடியோ!
சத்யம், இளையராஜா மியூசிக்னு பிரமாண்டமா முதல் முறை தனி தியேட்டர் அனுபவம் இனிதாகவேயிருந்தது !
இனி என்ன! சினிமா தான், கொண்டாட்டம் தான்! நோ கம்பெனினு இனி படம் மிஸ் ஆகாது!
தாரிணி ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி !
P.S: இந்த சீயான் படமும் மொக்கையாமே, அப்படியா ? :(
No comments:
Post a Comment