In search of the emotions that colour life and imprint the beauty of experience!

Monday, November 28, 2016

வாங்க உரமாக்க கற்றுக்கொள்வோம் - 1


வீட்டின் பின்கட்டில் இருக்கும் கால் அடி நிலத்தில் வாழை தென்னை வளரும் வீட்டில் வாழ்ந்த அனுபவம் இருக்கிறதா? சமையல் மிச்சங்களை பின்னிருக்கும் காலி இடத்தில் புதைத்து, சில மாதங்களுக்கு பின் உரமாக மாறும் அறிவியலை கண்டதுண்டா?
இரண்டுக்கு இரண்டு  என்ற குழியில் காய்ந்த இலைகள், பூக்கள், சமையல் கழிவுகளை மண்ணோடு கலந்து, சில மாதங்களுக்கு  மிதமான அழுத்தத்தில் மூடி வைக்கப்படும். கழிவுகளில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களின் செயல்பாட்டாலும், காற்று வெயில் முதலியவற்றின் ஆற்றலாலும் இக் கழிவுகள் மக்கி, உயிர் சக்தி நிறைந்த உரமாக மாறுகின்றன. இவற்றை தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளுக்கும் உரமாக இடப்படுகிறது.

இப்படியான நிகழ்வினை கண்டதில்லை என்பவரா நீங்கள் பரவாயில்லை, வாருங்கள்  கற்றுக்கொள்வோம்.
முன்னொரு காலத்தில் செய்ததை, இப்போது  வாழும் விறு விறு நகர வாழ்க்கையிலும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் சாத்தியமில்லை என்கிறீர்களா, வாருங்கள் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்ற பழமொழிக்கு சான்று அறிவோம்!

நாள்தோறும் வெளியேற்றப்படும் நம் வீட்டின் கழிவுகளில் எவையெல்லாம்  உள்ளன  என்று கவனியுங்கள். பெரும்பான்மையான வீடுகளின் கழிவுகள், மக்காத நெகிழி  பையகளில் தூசி குப்பைகளோடும் காய் கறி கழிவுகளோடும் சமையல் எச்சங்களோடும்  குப்பை தொட்டிக்குள்  எறியப்படுகிறது.
மக்கும் மக்காத குப்பைகள் கலந்து நஞ்சாகி  குப்பை கிடங்குகளுக்கு அனுப்ப படும் இவை, சில காலங்கள் பூமியில் சேர்ந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன.
இப்படி அலட்சியமாக தூர எறியப்படும் ஆர்கானிக் குப்பைகளில் தங்கம் போன்ற செல்வம் கிடைக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை நண்பர்களே!

ஆம், காய் கறி கழிவுகளை உரமாக்கி மண்ணின் உயிர் சக்தியை அதிகரிக்க செய்யும் உரமாக்கல் வழிமுறை நம் ஒவ்வொரு வீட்டுலேயும் சுலபமாக செய்ய இயலும்.

உரமாக்கல் பல்வேறு முறைகளில் செய்யப்படுகின்றன.
அவற்றுள் ஒன்று பின்கட்டின் கழிவு குழிகள்.
தோட்டம் இருக்கும் வீடுகளில் இடமிருப்பவர்கள் இப்படியான உரமாக்கல் செய்ய இயலும்.
அது போலவே, மொட்டை மாடிகளிலும், balcony எனப்படும் மாடி முகப்புகளிலும் உரமாக்கலை சுலபாக செய்யலாம்.

ஏரோபிக் வழியில் உரமாக்கலை  சிறிய இடமுள்ள வீடுகளிலும் செய்ய இயலும். இதற்கான வழி முறைகளை இப்பகுதியில் காண்போம்.

aerobic எனப்படும் உயிர்வளி கொண்டு செய்யப்படும் உரமாக்கல் 
மூடியுடன் கூடிய பானை அல்லது டப்பாக்களில் செய்யலாம் .
காற்று மிக முக்கிய பங்காற்றும் aerobic உரமாக்கல் வழிமுறையில் சமையல் கழிவுகள், முட்டை ஓடுகள், உபயோகித்த டீ பைகள், காய்ந்த பூ சருகுகள், இலைகள் ஆகியவற்றை மக்க செய்து உரமாக்க  இயலும்.

1) கழிவுகளை ஈரத்தின் அடிப்படையில் பிரித்து கொள்ளவும்.
2) ஈரமாக இருக்கும் கழிவுகளை காய்ந்த இலைகள் மற்றும் காகிதங்களுடன் கலக்கவும்.
3)  ஓட்டை கொண்ட பானை (அ ) டப்பாவின் உட்பகுதியில் காகிதம் கொண்டு கவர் செய்யவும்.
4) மண்ணையும் மேல கலந்த கழிவுகளையும், காய்ந்த இலைகளையும் இந்த காகித உரையின் மேல் அடுக்கடுக்காக அடுக்கவும்.
5) இந்த கலவை ஈரம் குறைந்த அளவில் இருக்க வேண்டும்.
6) இதனுடன் மாட்டு சாணத்தை (அ) புளித்த மோரை ஒரு தேக்கரண்டி அளவிற்கு தெளிக்கவும். உரமாக்கலுக்கு தேவையான நுண்ணுயிர்கள் இவற்றிலிருந்து கிடைக்கின்றன.

தினசரி கழிவுகளை மேற்கூறிய விதத்தில் பானையில் சேர்த்து  கிளறி வைக்க வேண்டும்.பானை நிரம்பிய பின்னர் மூடி வைக்கவும்.

காற்று புகுவதற்காக இந்த குவியலை  தினமும் கிளறிவேண்டும். 30 நாட்கள் கழித்து அறுவடை செய்யப்போவது கருப்பு தங்கம் எண்ணப்படும் உரமாகும். இவற்றை மண்ணோடு கலந்து செடிகள் வைக்க பயன்படுத்தலாம்.

60% தினசரி கழிவுகளை உயிர்சத்தாக மாற்றும் ஏரோபிக் உரமாக்கலை கொண்டு எந்த செடியை நீங்கள் வளர்க்க போகிறீர்கள்?
உங்கள் உரமாக்கல் அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்த இதழில் உரமாக்கலின் வேறு சில முறைகளை பற்றி காண்போம்.

பி. கு:
ஈரம் மிகுந்திருந்தால் நாற்றம் வீச வாய்ப்புள்ளது. அப்படியிருந்தால் காய்ந்த இலைகளை அல்லது காகிதங்களை சேர்க்கவேண்டும். காற்று புகுவதால் நிகழும் உரமாக்கலுக்கு தினசரி கிளற வேண்டியது அவசியமாகும். மாமிச எச்சங்கள் ஏரோபிக் உரமாக்கல் முறையில் கண்டிப்பாக சேர்க்க கூடாது.
பெரிய அளவிலான கழிவுகளை சிறு சிறு அளவில் வெட்டி சேர்த்தால் உரமாக்கல் நிகழ்வு விரைவாக நடைபெறும்.

Sustainable Menstruation

Periods - Off late has been one of the most advertised word in the current trend of marketing industry. We have sport person to film stars endorsing brands, commercial broadcasts pitching in their brands for active women, for longer peaceful nights of sleeps, for comfort of young girls amidst the churn of adulthood. Each of these portrayal, in every other way pursue comfort to women in the 'period'.

Menstruation as such is a period of distress for most women. From the PMSes, to the pain, to the bleeding, cramps, dampness irritation and the much needed toilet breaks never let women have yet another day.
Most of the present day urban women have been benefited by the accessibility of these disposable sanitary pads, which has been a boon for the day to today activities. Work, travel, sleep have all been peaceful for the sanitary pad users. The rule here is use, throw and forget.
Hardly we bother to know what is in the white looking thin pad, how good/bad is the effect of the long term use, decomposing period of the used pads.
Most of us walking down the street would have noticed the used menstrual pads along roadside, chewed by dogs and cows; clogged drainages have been the after effects of wrong disposal of these sanitary pads. Each sanitary pad is equivalent to 4 plastic bags and takes almost hundreds of year for decomposing. Knowing all these, we have never let go off the comfort of these disposables give us.

Let's get to know more!

The white bleached thin sanitary napkins have said to contain dioxins, synthetic fibers and petrochemical additives in addition to the chlorine bleach. The dioxins present are toxic and remain in fatty tissues in human body as a potential heath threat.Vagina being the most permeable skin, could easily absorb these toxic chemicals from these pads on a regular usage. 
The other disposable sanitary product - tampons are even more disastrous as they are placed with the vaginal canal. Containing the above toxins, tampons have the disadvantage of absorbing the menstrual discharge along with the vaginal fluid, which is known for self-healing. Several issues of toxic shock syndrome are recorded for tampon usage and are highly disregarded.

The above disposal sanitary feminine products are the most advertised and have been used my most women. However these are unsafe for users as well as the environment. With larger market available for feminine hygiene, sustainable alternatives have been faded over by the disposables.

In the era of internet and google searches, the quest for a better hygiene is not limited to disposables. A whole lot of sustainable disposables are available for a even better menstrual hygiene.

Reusable menstrual pads



These reusable menstrual pads are a much modified version of the cloth napkins of the previous generation! These pads are made of organic cottons dyed with organic dyes. Soft flannel is layered with soft absorbent cotton with hooks to fasten them on the panty is available.
Soap wash and sun dry are the best disinfectant process to reuse these pads, period after period. With so much availability sunlight in our geography, these pads are much suitable. The absorbent cotton, leaves the top layer dry as in disposables. These pads come in different sizes s, M, L, XL and also with insert cloths for heavy flow days.

Reusable menstrual cloth pads are safer options compared to the disposables. Just with an extra step of washing and drying they are absolutely safe for us and the environment.

Reusable menstrual cups. 


Menstrual cups are in short are the greatest boon for menstruating women of present day. No dampness, no rash, no smell, no garbage, no discomfort, in short 'for a comfortable period'. In short, this hygiene product is so comfortable that it makes  you forget that you are menstruating.
Made of medical grade Silicone, some from TPE, the menstrual cups are placed in the vaginal canal to collect the menstrual discharge. Silicone is an inert material that is used in medical sciences for surgical equipment's, organ implants etc., Hence the cups made of silicone do not absorb any fluid from the vagina, instead store the blood which has to be emptied in a few hours based on flow. The cups are made of different sizes/lengths and capacity to suit women of all age.  With proper disinfectant mechanisms such as boiling in water for a few minutes[as done for feeding bottle nipples ] these can be soap washed and stored in a cotton bags until the next period. This menstrual cup can be reused for few years period after period.
Once inserted, the cup collect the menstrual fluid form vagina, forming a seal with the vaginal wall. These cups have to be removed, water washed and inserted every 4-7 hours, not more than 8 hours.
Sealed cups with perfect fit have 0 leakage and makes you forget the period taboos, even letting one the confidence to wear a white underwear. 💃💃
All you need for a period is a menstrual cup and some water to wash of the cup after every usage.
Very less women are aware of menstrual cups, but once get to know the dynamics of the menstrual cup and the liberating freedom from all weariness of periods it offers, anything to date is irreplaceable.
Except for women with yeast infection, and post delivery people who are prone to infections, a whole lot of women have been using the menstrual cups.
Even women with copper T also called UTI device have been using menstrual cup successfully with relevant medical advice from their gynaecologists.

Cups/Reusable pads are significant alternatives that are much within the reach for a better period and of course a better womanhood in an environmental friendly way.
So what friends, lets get all women to know period is easy for her and her earth!
After all the best gift one can can give is sharing knowledge!





Monday, September 5, 2016

தனியே தன்னந்தனியே!



நினைவு தெரிஞ்சதிலிருந்து இப்போது வரை, தியேட்டர்ல படம் பார்க்கறது போல கன்சிஸ்டெண்ட் ஆனா (சோம்பேறித்தனமான )பொழுது போக்கு வேற எதுவும் இல்லை.
தெருவுக்கு தெரு சினிமா தியேட்டர் இருக்குற ஊர்ல பொறந்து வளர்ந்ததாலோ என்னவோ, தியேட்டர்ல சினிமா  பார்க்கற அனுபவம் அப்பவும் இப்பவும் ரொம்ப பிடித்தமான ஒன்று. 10 மாச குழந்தையா இருந்ததிலிருந்து தியேட்டர் போறேனாமாம்  ;)  ஹிஹி
அப்பறம் வளர்ந்த பின்னே சோத்து மூட்டையெல்லாம் கட்டிட்டு போய் சினிமா பார்த்த அனுபவம்  ரெண்டு மூணு இருக்குது...
கிட்டத்தட்ட எல்லா நட்புகளையும் சினிமாவுக்கு இழுத்துட்டு போயிருக்கேன். நண்பர்கள் எல்லாம் நம்மள மாதிரி தானே இருப்பாங்க!

எவ்வளோ பிடிக்கிற அனுபவமா இருந்தாலும், தனியா தியேட்டர் போறதுக்கு மட்டும் ஒத்துவரவே இல்லை, இந்த மண்டை! கறிக்கடை, மீன் மார்க்கெட்க்கெல்லாம் தனியா போயிருந்தாலும் சினிமா தியேட்டர்னு வரும்போது மட்டும், போகணுமானு யோசிச்சு பல படங்களை தவறவிட்டிருக்கேன்.

இப்படியே இருந்தா எப்படி உருப்படறதுனு ஒரு லீவு நாளா பார்த்து, வீட்டுல யார்கிட்டேயும் சொல்லாம கிளம்பியாச்சு ராயப்பேட்டைக்கு !

சத்யம் 6-சீசென்ஸ்ல குற்றமே தண்டனை படம்; எத்தனை தியேட்டர்ல படம் பார்த்தாலும், சத்யம் காம்ப்லெஸ்ல இருக்கிற சுகம் போல வேற எங்கேயும் வருமா? என்ன குஷின்ஸ் , என்ன ஆடியோ!
சத்யம், இளையராஜா மியூசிக்னு பிரமாண்டமா முதல் முறை தனி தியேட்டர் அனுபவம் இனிதாகவேயிருந்தது !

இனி என்ன! சினிமா தான், கொண்டாட்டம் தான்! நோ கம்பெனினு இனி  படம் மிஸ் ஆகாது!
தாரிணி  ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி !

P.S: இந்த சீயான் படமும் மொக்கையாமே, அப்படியா ? :(



Saturday, June 4, 2016

இறைவி

ஓர் உயிர் அமீபாவிலிருந்து ஆறறிவு மனித இனம் வரை, உயிர்பித்திருத்தல் பிரதான காரியமாக இருக்கிறது.
உயிர்பித்தலின் முதல் படிகள்  இயற்கையாகவே அமையப்பெற்றதாலேயோ என்னவோ பெண்கள்  அடி, உதை குத்து கொலை போன்றவற்றில் அதிகம் ஈடுபடாமல், விட்டுக்கொடுத்தல், பொறுத்து வாழ்தல் என்பதில் பெரும் பங்காற்றுகிறார்களோ ? இதெல்லாம் இப்படியாக இருக்க செய்யவே நம் சமூக முறை ஆணாதிகத்தின் பிடியில் இருந்துகொண்டு, எப்படிப்பட்ட இடர்வரினும் பொறுமையான பூமித்தாயாகவே இரு என்று பெரும்பாலான பெண்களின் வாழ்கையை கடவச் செய்கிறது.

ஓரளவு பொருளாதார பலமும் கல்வியும்  பெண்களை சுதந்திரமான முடிவெடுத்து வாழ செய்யும் இக்காலத்தில், தனக்கான ஹாட்ரிக் வெற்றி அமையும் நேரத்தில், நீளமான இறைவி படம் தந்த கார்த்திக் சுப்புராஜிர்க்கு நன்றி சொல்லணும் மக்களே, நன்றி சொல்லோனும்!
அப்படியே S. J . சூர்யாவை அழகாக காண்பித்ததற்காகவும் :P

Monday, May 23, 2016

நெகிழி இல்லா நகரம் - பெங்களூரு!

பெங்களூர் நகரில் ஓர் அதிகாலை காட்சி -  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எதிர்ப்படும் அனைவரும் தத்தமது பைகளோடு வந்து கடைகளில் பொருட்களை வாங்கிகொண்டிருந்தனர். காய்கறிகள் மட்டுமின்றி அரிசி பருப்பு வகைகளும் தரமான காகித பைகளில் விற்பனையாகிறது!

இதில்லென்ன வியப்பு என்கிறீர்களா? சற்று யோசித்து பாருங்கள், சென்ற முறை நீங்கள் கடைக்கு சென்ற பொழுது எதிர்பட்ட எத்தனை பேர் துணி பைகளோடு வந்திருந்தனர்? எத்தனை பொருட்களை நீங்கள் காகித பொட்டலங்களிலோ துணி பைகளாகளிலலோ வாங்கினீர்கள்?
அப்படி ஒரு காட்சியை உங்கள் நினைவுகளை சில வருடங்களுக்கு முன்பு  இழுத்துசெல்கிறதா?

இடம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் ஊரில் பொதுவாகவே பொறுப்புணர்வு சற்று சளைத்திருக்கும். அதற்கு பெங்களூரு ஒரு எளிய உதாரணம். இந்தியவிலுள்ள பல்வேறு மாநிலத்தவர்களை கணிசமான எண்ணிக்கையில் இங்கு காண முடியும். ஐந்தில் ஒருவர் மட்டுமே கன்னடர்களாக இருப்பர்; அதிலும் உள்ளூர் மக்கள் பத்தில் ஒருவராகவே இருப்பர். இவ்வாறிருக்கும் மக்கள் தொகை அமைப்பில், தனித்து இயங்கும் போக்கும் பொறுப்பற்ற தன்மையும்  மிகுதியாக காணப்படுகின்றது.


இத்தகு ஊரில் முதன் முறையாக மக்களை நெறிப்படுத்தவும், அவல நிலையிலிருக்கும் சுற்று சுழலை பேணவும் கர்நாடக அரசு புது சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது .

அரசியலமைப்பின் 48ஆம் சட்டவிதியின் படி சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு மாநில அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம் நெகிழி சார்ந்த பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது!

பெரும்பாலான நெகிழி தடை என்பது 40 மைக்ரானுக்கு குறைந்த அளவிலான நெகிழி பயன்பாட்டை தடை செய்து வந்துள்ளது. அதாவது, மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் பயன்பாட்டை மட்டுமே இது நாள் வரையிலான தடைகள் கட்டுபடுத்திவந்தன.

ஆனால் கர்நாடக அரசின் இத்தடையானது நெகிழியால் செய்யப்பட்ட பைகள், தட்டு, கரண்டி, மேசை விரிப்புகள், பிளக்ஸ் சுவர் விளம்பரங்கள் என அனைத்தையும் தடைசெய்துள்ளது. பொது மக்கள், பெரு நிறுவனங்கள் என அனைத்து பிரிவினருக்கும் பொதுவாக இத்தடை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இத்தடையை  மீறும் பொதுமக்களுக்கு முதல் முறை அபராதமாக 500 ரூபாயும் அதன் பிறகான மீறல்களுக்கு 1000 ரூபாயும் வசூலிக்கப்படும்.
தடையை  மீறி உற்பத்தி செய்வோருக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை  அபராதம் பெறும்படி அரசு இச்சட்டத்தை அரசாணையில் வெளியிட்டுள்ளது.

வனத்துறை மற்றும் மருத்துவ துறைக்கு விலக்களித்துள்ள இச்சட்டம், பால் தயிர் முதலியவற்றின் பயன்பாட்டிற்கு மட்டுமே நெகிழியை அனுமதித்துள்ளது. மக்கவே மக்காத தெர்மோகோல், ஸ்டீரோபோம் போன்றவற்றையும் சேர்த்தே  தடை செய்துள்ளது.

ஆயிரக்கணக்கான சிறு குறு நெகிழி தயாரிப்பாளர்கள் இத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதையும் நாம் காண முடிகிறது. நெகிழி உற்பத்தியாளர்கள் இத்தொழிலிற்க்கு மாற்றாக  துணி, காகித, சனல் பை உற்பத்திக்கு மாறுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசின் வருவாய் இத்தடையால் பாதிக்கபடுவதைக் காட்டிலும் நெகிழி கழிவுகளை அகற்றும் பணிகளால் ஆகும் செலவு அதிகமாக உள்ளதாக அரசு வருவாய் துறை குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றதில் தடை கோரிய நெகிழி உற்பத்தியாளர்கள், அதில் வெற்றி பெறவில்லை.

அரசோ இத்தடைய மிக தீவிரமாக நடைமுறை படுத்திக்கொண்டுள்ளது. மாநகர ஆணையாளர்கள் முதல் தாசில்தார்கள் வரை அனைத்து அதிகாரிகளுக்கு இச்சட்டத்தை நடைமுறை படுத்தும் அதிகாரத்தை பரவலாக்கியுள்ளது.

சுழல் ஆர்வலர்கள் இத்திட்டத்தை வரவேற்றதோடு அரசோடு இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தனை பாராட்டையும் வரவேற்பையும் ஏன் என்று கேட்பவரா நீங்கள்? உங்கள் வீட்டின்  தினசரி கழிவுகளை  கொஞ்சம் கவனியுங்கள். சில நூறு வருட சுவடை உங்கள் மூலமாக அவை விட்டுச்செல்லும்!

பெங்களூரு மாதிரியான மக்கள் தொகை வீக்கத்தை கொண்ட ஊரின் நாளொன்றின் நெகிழி கழிவு சுமார் 1050 டன் ஆகும். சாக்கடை அடைப்பிற்கும், மொத்த கழிவுகளை  அகற்றும் பணிகளில் நெகிழியானது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதோடு நிலத்தடி நீரின் வளத்தையும்  கடுமையாக பாதிக்கிறது.
மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் தேவைப்படும் இந்நெகிழியை நம் வீடு கழிவுகளிலிருந்து அகற்றுவதே தற்போதைய மாபெரும் சவால்!

சூழல்கேடு மட்டுமின்றி நெகிழியினால் ஆன டப்பாவில் உணவு பொருட்களை பயன்படுத்துவதும் உடல்நலத்திற்கு கேடானது. மிக தரமான நெகிழி உணவு டப்பாக்கள்  கூட 1 வருட பயன்பாட்டிற்கு பிறகு உகந்ததில்லை என்று கூறப் படுகிறது. இத்தகவல்களை பொருட்படுத்தாமல் 500- 1000 ரூபாய்க்கு வாங்கிய உணவு டப்பாக்களை சில பல ஆண்டுகளுக்கு நாம் உபயோகப்படுத்துகிறோம்!

நம் பயன்பாட்டை எளிதாக்க வந்த நெகிழி நம் சுழல் நண்பர்களான கால்நடைகளையும் விட்டுவைக்கவில்லை!
நோயுற்று இறந்த மாட்டின் வயிற்றில் கிலோ கணக்கில் நெகிழி இருந்தாக செய்திகளில் அவ்வபோது காண்கிறோம்.


இவ்வனைத்தையும் தொடக்க இடத்திலேய கட்டுப்படுத்த கர்நாடக அரசு கொண்டு வந்திருக்கும் தடை பெரிதாக உதவும்.

நெகிழி தடை சட்டத்தோடு மேலும் பல சுழல் இசைவான திட்டங்களை செயல்படுத்தும் தன்னார்வலர்கள் குழுக்கள் பெங்களூரில் உள்ளன.

பசுமை கல்யாணங்கள், மாரத்தான் போட்டிகள், காய்ந்த இலைகளை  மட்கி உரமாக்கல், அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்டாக மட்கும் குப்பைகளை உரப்படுத்தும்  திட்டங்கள் என்று பெங்களுர்வாசிகளிடம் இருந்து நாம் கற்று செயல்படுத்த சுழல் இசைவான திட்டங்கள் பல்வேறு உள்ளன.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சுழல் ஆர்வலர்களால் கொண்டு வரப்பட்டுள்ள திட்டம்  Swachgraha . இத்திட்டத்தின் படி ஒவ்வொருவரும்  தங்கள் வீடுகளிலே மட்கும் கழிவுகளை பிரித்து உரமாக்கவும், அதிலிருந்து காய் கறிகள் தோட்டம் அமைத்து பசுமை புள்ளியை தொடங்கவும்  ஊக்குவிக்கிறது .

மட்கும் குப்பைகளை உற்பத்தியிடத்திலேயே களையவும், குப்பைகள் ஓரிடத்தில் சேர்வதை தவிர்க்கவும், ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்யவும் என பல சாதகங்களை கொண்டுள்ள இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 10 லட்சம் பெங்களூருவாசிகளை பசுமை புள்ளியில் இணைக்க தீவிரமாக இக்குழுவினர் இயங்கிகொண்டுள்ளர்கள்!

இதற்கெல்லாம் நமது தொடக்க புள்ளி - சிந்தித்து செயல்படுவதே! நெகிழிக்கு மாற்றான காகித/துணி பைகளை எப்போதும் நம் கைவசம் வைத்திருப்பதும், திட்டமிட்டு செயல்படுவதுமே நெகிழியின் பயன்பாட்டை நீக்கிவும் கட்டுபடுத்தவும் உதவும்.

மக்கும், மகாத குப்பைகளை பிரித்து வைப்பதும், அடுத்தபடியாக உரமாக்கல் வழிகளை பழகுவதும்  நம் ஆரோக்கியத்திற்கும் சுற்று சூழலிற்கு நன்மை பயக்கும் திட்டங்களாகும்!
சிறு முயற்சி பெரும் நன்மை பயக்கும்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு, எனவே நாமும் இதுபோன்று அக்கறையோடு செயல்படுவோமா ?