மல்லுவுட்டிலிருந்து பார்த்த அடுத்த படம் - 'நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள'
[கீதாவும் ரீனாவும் சிரித்து சிரித்து பார்த்த படமென்று ஹரி சொல்லி பார்த்தது.]
ஷீலா சாக்கோ, ஒரு கல்லூரி பேராசிரியை, இவரின் ஒரு காலை நடைபெயர்ச்சியுடன் துவங்குகிறது கதை. புற்றுநோயின் அறிகுறி தனக்கு இருப்பதாக சந்தேகிக்கும் ஷீலா அதன் பின்னே என்ன செய்கிறார், நோய் அறிந்து அவர் குடும்பத்தினர்க்கும் அவருக்கும், நடக்கும் அத்தியாயங்களே இப்படம்.
புற்றுநோய் என்றாலே, சோகம் கவலை என்று மட்டும் பார்த்த நமக்கு, 'நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள 360'ல் புதிய கோணம். 'பய'மயமான கணவன், பொழுதும் தீனி நொறுக்கும் வெளிநாட்டு ரிட்டர்ன் மகன், மாடர்ன் மகள்கள், கருமி மருமகன், நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மாமனார், இவர்கள் நடுவில், ஷீலா எப்படி புற்றையும் அதன் மருத்துவத்தையும் எதிர்கொள்கிறார் என்பதே படம்.
நகைச்சுவைக்கு சிறிதும் குறைவில்லாமல், காதல், பிரேக்கப், நட்பு, செண்டிமெண்ட் சுற்றம், என அன்பும் அக்கறையும் நிறைந்து யதார்த்தற்கு நெருக்கமான கதை. மிகைப்படுத்துதல் இல்லாமல், ஒரு குடும்பத்தின் இயல்பையும், அதன் நெருக்கடியனான பொழுதில் ஏற்படும் நிலையை திரையில் காண்பித்திருக்கிறார்கள்.
கான்சர் என்றால் அழுது வடிந்து, சோகத்தை மட்டும் கொள்ளாமல், குடும்பத்தினருக்கு நடக்கும், குடும்பத்தினருக்குள் நடக்கும் , காட்சிகளை கான்செர், கீமோ என்ற அத்தியாயங்களுடன் பிணைத்திருக்கிறார்கள்.
ஷீலாவாக, பன்னீர் புஷ்பங்கள் ஷாந்தி கிருஷ்ணா; Warrior mom ஆக கலக்கிவிட்டிருக்கிறார். சாக்கோவாக லால், பயந்து, கலங்கி, அப்பாவாக நிறைந்திருக்கிறார். நிவின், funny guy as usual!
நிவின் தயாரித்திருக்கிறார். But why என்ற கேள்வி வந்துகொண்டே இருந்தாலும், அன்பு நிறைந்த ஒரு எதார்த்த திரைப்படம், அது போதுமே காரணம்...
'நண்டுகள் நாட்டில் மாட்டி, பிடித்து இழுக்கப்பட்டாலும் எதிர்த்து வென்று நிற்கும் போர்வீரர்கள், கேன்சர்ஐ வென்றவர்கள், என்று சொல்லி இருக்கிறார்கள் ..
இப்படியான படங்கள் மல்லுவுட்டில் மட்டும் சாத்தியம்!
Feel good movie!