In search of the emotions that colour life and imprint the beauty of experience!

Wednesday, August 30, 2017

DummiesforUrIntrospectionHindus #1

ஒரு மன்னிப்பும் கொஞ்சம் கேள்விகளும் ....
"இந்து சேரியை கொளுத்துவான்
இந்துத்துவா மசூதியை இடிக்கும்"

பல்வேறு மீம்கள் உலா வரும் இணைய உலகில், இப்படி ஒரு மீம் பகிர்ந்ததற்கு சில வருத்தங்கள் ஏற்பட்டு விட்டது.
அவ்வருத்தத்திற்கு மன்னிப்பும், அதனுடனே சில கேள்விகளை வைத்துள்ளேன். பதில் இல்லையெனினும் கேள்விகள் உங்களுக்காகவே...

இந்து எனப்படுபவன் யார்?
அவமானப்படும்படியான செய்தியான சேரியை எரிக்கும் செயல் எப்படி, எதற்க்காக இந்து என்பவனுடைய தலையில் ஏறியது ?
சரி, சேரியை சேர்ந்தவர்கள் எம்மதத்தை சேர்ந்தவராக இருக்கிறார்கள், பெரும்பான்மையாக?

ஒரே மதத்தினவர்களாக இருந்தும் கோவிலில் நுழைய தடை இருந்ததும், 1924ல் பெரியார் வைக்கத்தில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தியதை தெரியுமல்லவா?
இதோ 2017 ஆண்டு, பெரிய கோவில்களில் இப்பிரச்சனை இல்லாவிடுனும், இன்றும் இந்து நம்பிக்கை உள்ளவர்கள் சில ஆலயங்களுக்குள் நுழைய ஏற்படும்  பிரச்சனைகளை செய்திகளாக கண்டிருக்கீர்களா?

ஒரே மதத்திற்குள் இருந்தும் அனைவர்க்கும் சமநிலை இருக்கிறதா ?
எதனால் படிநிலைகள் இருக்கிறது?
படிநிலையில், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?
எதனால் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள்?
அதனால் தங்களுக்கு என்ன வசதி?

மேல் படியில் உள்ள பிரிவினரை தாங்கள் காணும் போக்கு என்னது?
கீழ் படியில் உள்ளவர்களுடனான தங்கள் உறவு எப்படியாக உள்ளது?
இதற்கு மூல காரணம் என்ன?

ஹிந்து எரிப்பான் என்று சொன்னவுடன் வரும் கோபம், தாக்கப்பட்டவன் எம்மத நம்பிக்கை உடையவன்(எம்மதமாயினும் தாக்கப்படுவது மனித உரிமை மீறிய செயல் ), அவன் எதற்கு தாக்கப்படுகிறான் என்பதை (பாவம் புண்ணியம் தாண்டி) நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

இக்கேள்விகளை அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாக இதுவரை அணுகவில்லையெனில், ஏன் ?

ஒரு இந்து இன்னொரு இந்துவால் தாக்கப்படுவது, அதுவும் தான் நம்பும் இந்து கடவுளை தன் சேரியை சுற்றி வர ஆசைப்பட்டதிற்கு எனில்  இந்துவாக தங்கள் சமாதானம்/பதில்  என்ன?

ஒரே மதம் அதில் இருக்கும் அனைவரையும் இந்து என்று சேர்க்காமல் , பிரிந்து பிளந்து கிடப்பது எதனால் ?

இக்கட்டான பொழுதுகளில் (ஹிந்துக்களில்) காணப்படும் inert நிலையினை கண்ட கோபமே அந்த மீம்..
இப்பொழுது சொல்லுங்க எனக்கான சமாதானம்?






Saturday, August 5, 2017

எனக்கே எனக்காக..


சிட்டு குட்டியின் துறுதுறு விளையாட்டு இல்லா வீட்டில்  
சாவி கொண்டு, தானே உள் நுழைகிறேன்.
அவன் இனிய ரீங்காரம் கேட்காமலும், 
அவன் தாயின் அன்பு குரல் இல்லாமலும்,
அவன் தந்தையின் நேர்த்தியான செயலற்ற வீட்டில் 
பெருத்த அமைதி வரவேற்கிறது!

புதிய தேசத்தின் மௌனம் கனமாக நிரம்பி வழிய 
தேடி வந்த நாட்டின் குளிர், அறையினுள் பரவுகிறது.
நினைவுகளை மெல்ல அசைபோடுகிறேன்..
உறவுகளும் நட்புகளும் வெகு தொலைவில் இருக்க 
நான் இங்கு தனியே..

வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லாதபொழுதும் 
காணாத அனுபவத்தை தேடி 
புதிய வாசத்தை நுகர,
இங்கு நான் :)

இதோ எனக்கான 'என்' நாட்கள் தொடங்கிற்று...

அடிபுல் ருசிக்க,
ஆனந்த குரலிசைக்க,
களித்து வாழ ,
நுரையீரல் முழுதும் காற்று நிரப்ப  
வேறு உலகம் அறிய- என 
எத்தனை எத்தனை குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன் :D 

நிலையானதும்,
சரியென்றும் தவறென்று 
எதுவும் எப்பொழுதும் கிடையாதே!
வாழ்ந்து தான் பார்க்கிறேன்
எனக்கே எனக்கான நாட்களை...