In search of the emotions that colour life and imprint the beauty of experience!

Sunday, February 19, 2017

கணினி பெண்கள் நாங்கள்

2000ல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த பெரும்பான்மையோர் போல கணினி துறையில் வேலைக்கு சேர்ந்து இதோ 11 வருடங்கள் ஓடி விட்டது. குறைவில்லாத வேகமும் விறுவிறுப்பும் கொண்ட ரோலர் கோஸ்டர் பயணமாகவே இத்துறையில் பணி இருந்து கொண்டு வருகிறது.

பெங்களூர்ல ஐ. டி. வேலையா ஐயோ ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்குமா? பொண்ணுங்களுக்கு இந்த வேலை தேவையா என்ன? நம்ம ஊர்ல  பேராசிரியர் வேலை கிடைக்காதா? M  Tech படியேன்?  என்ன இருந்தாலும் அரசு பணி போல இருக்குமா ?Y2K போன்ற சூழ்நிலை வந்தா வேலை என்னாகும்?

அத்தனை அத்தனை கேள்விகளின் மத்தியில் கல்லூரியில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்த பத்து தோழிகள் நாங்கள்.
சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், கணினி, எலக்ட்ரானிக்ஸ், instrumentation   என அத்துணை பிரிவுகளில் பட்டம் பெற்றிருந்த நாங்கள், வெவ்வேறு நிறுவனங்களில் கணினி பொறியாளர்  வேலையில்  சேர்ந்தோம்.

குடும்ப பின்னணி மற்றும் சூழ்நிலையில் வேறுபட்டிருந்த நாங்கள், இன்று பொருளாதார சுதந்திரத்தோடும், social empowerment யுடன் இருப்பதற்கும்,  அதற்கு இந்த கணினி துறை பணியும் அதன் சம்பாத்தியமும் அனுபவமும் முக்கியாமானவை!

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரியான என்  தோழி, தன் கடினமான  உழைப்பாலும் வெளிநாட்டு மென்பொருள் வேலையில் அமர்ந்து தன் அறிவாற்றலாலும்  மிக சில வருடங்களில்  தன் பெற்றோர்க்கு என  வீடு கட்டிமுடித்தாள்!
சிறிய வயதில் தந்தையை இழந்து, அறிந்தவரின் உதவித்தொகையில் பொறியியல் படித்த இன்னொரு தோழி, இன்று திருமணமாகி அமெரிக்காவில் மென் பொறியாளராக இருக்கிறாள்.  அம்மாவிற்கான பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்து, தன் தாயை போலவே கணவனை இழந்த மாமியாரையும் சேர்த்தே கவனித்துகொள்கிறாள்!

குடும்பத்தின் பொருளாதாரத்தை  தாங்குவதுடன் நிதி ரீதியான முடிவெடுப்பவர்களாகவும் பெரும்பான்மை பெண்கள் இருக்கின்றோம்.
பெண்களின் பொருளாதாரம் - குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எத்தனை அவசியமானது என்பதையும் ஆண்-பெண் சமநிலை உறவிற்கும் முக்கியம் என்பதை உணர்த்த மேம்பொருள் துறையால் ஏற்பட்ட பொருளாதார இலக்கு/உயர்வு நடுத்தர குடும்பங்களின் வளர்ச்சியாக கண்கூடாக இருக்கிறது!

"என்ன இது உங்க பொருளாதாரம் உயர்ந்திருச்சு, நீங்க செலவு செய்றதால எங்களுக்கு விலை கூடி போச்சு" என்ற புலம்பல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இலட்சங்களில் சம்பளம் இருந்தும் தேவையையும் அவசியத்தையும் புரிந்து, தங்கள் குழந்தையை பொறுப்பாக வளர்க்கும் அம்மாக்கள் இருப்பதும் இங்கு உண்டு.

வசதியான பணியிடங்கள், நடப்பு டெக்னாலஜியுடனான வேலை,வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறை, கணிசமான ஆரம்பநிலை ஊதியம், இவையெல்லாம் வெளிப்படையாக தெரிந்தாலும், பெண்கள் அதிக அளவில் விரும்பும் துறையாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம்  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற எச். ர். திட்டங்களாகும்.

2000 ஆரம்பத்தில் ஏற்பட்ட கணினி பெண் ஊழியரின் கொலையின் பின்பு, பெரிய நிறுவனங்களும்(Infy , Wipro, HCL TCS, ...etc ) அனைத்தும் தங்கள் நிறுவன பெண்களின் பாதுகாப்பை மிக  உறுதியாக பாதுகாகின்றனர்(விதிவிலக்குகள் இடங்களை போல் இங்கேயும் உண்டு)!
பணி முடிந்த இரவு பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு,  அலுவலகத்தில் எந்நேரமும் உணரும் பாதுகாப்பை எங்கள் பெண் தோழியர் பெற்றுருக்கிறோம்.
அத்துடன் பெண்களுக்கு அசவுகரியம் (அ) எதிராக  நிகழக்கூடிய தொல்லைகளை விரைவாகவும்நம்பகவாகவும் தீர்த்துவைக்கும் குழுக்கள் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் விசாரிக்கப்படும் பிரச்சனைகளை பாதிக்கப்பட்டவருக்கு எந்த தொல்லையும் இல்லாதவாறு நடக்கின்றன.

கணினி மென்பொருள் பணியின் இன்றியமையாத பகுதி - தொடர் கற்றல், புதுப்பித்தல்! பெண்களின் இயல்பான கற்றல் ஆற்றல், மாறும் தொழிற்நுட்பத்தோடு ஈடு கொடுப்பதினால் பெண்கள் இயல்பாகவே இத்துறையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம்.

ஆரம்ப படி நிலை(fresher )பணிகளில் பெண்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கின்றது. 7 ல்  ஒருவர் பெண்ணாக இருக்கின்றனர்/இருந்துள்ளனர். ஆரம்ப நிலை பணியில் அதிகம் இருக்கும் பெண்கள், மேல் பதிவுகளில் சொற்பமாக இருக்கின்றனர்!
ஆனாலும் இங்கு வயது வரம்பு disadvantage ஆக இருப்பதில்லை.
மகப்பேறு விடுப்பில் சென்று குழந்தை வளர்ப்பிற்க்காக  பணியிலலிருந்து விலகுபவர்களில் கணிசமானோர் சில வருடங்களில் மீண்டும் பணியில் சேருகின்றனர்.
இதற்க்கான அடிப்படை காரணம்  வேலை காலத்தில் கிடைக்கும் அனுபவமும் அதன் மூலம் பெரும் தரும் கற்றல்திறனுமாகும்!

ஒரு சில நிறுவனங்களில் அரை நாள் வேலைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் வந்து, அவர்கள் வீடு திரும்புவதற்குள் பணி முடித்து செல்லும் பெண்களுடன் வேலை செய்திருக்கிறோம்!

வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பும் அதிக அளவிலான நிறுவனங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. இணைய வசதியும் புதிய பரிமாணத்தில் வெளிப்பட்டு கொண்டிருக்கும் தகவல் தொடர்பு application களும், வீட்டிலிருந்து பணி செய்வதற்கு நிறுவனங்களை ஏற்று கொள்ள செய்கின்றது!

'பெற்றோர் ஆசிரியர் சந்திரப்பிற்காக', 'பெற்றோர் உடல்நலக்குறை' , 'AC ஒத்துக்கொள்ளும் உடல்நிலை இல்லை ' என்ற சில காரணத்திற்காக வீட்டிலிருந்து வேலை செய்கிறேன் எனும் மெயில்கள் ஒரு வாரத்திற்கு  10ஆவதுஇருக்கும்!

வேலை நேர Flexibility யும் பெரிய நிறுவனங்களில் இருக்கிறது -
அலுவலகத்திற்கு வருவதற்கும் போவதற்குமான கால நெகிழ்வுதன்மை . இது 'வரமா சாபமா என்ற அளவிற்க்கு விவாதங்கள் எங்களுடைய பெண்கள் குழுவில் நிகழும்.
வீட்டுவேலையை முடித்து பணி அலுவல்களை விடிய விடிய செய்யும் நிலை எங்கலுக்கு அடிக்கடி ஏற்படும்!

கணினி துறையின் வேலைகள் பல்வேறு அளவுகளிலும் பரிமாணத்தில் இருக்கின்றன!
செயல்திட்டத்தின் project - requirement தேவை, design வடிவமைப்பு, product இறுதி செயல்பாடு, அதனை சோதித்து சரி பார்க்க(test verification ), குறைநீக்குதல்(defect fixing),  வெளியீட்டு திட்டம்(release பிளான்) மார்க்கெட்டிங், ஆவணப்படுத்தல், வாடிக்கையாளர் எங்கேஜ்மெண்ட், மேனேஜ்மென்ட்  என ஒவ்வொரு பணி படிநிலையில் பெண்கள் பங்கு நீக்கமற இருக்கிறது.

இத்தனை நன்மைகள் இருக்கும் பணி இடத்தில், வெளி உலகத்தை  ஒத்த சவால்களும் சில இருக்கின்றன.

ஊதிய வித்தியாசம்  அதன் பாலின பாகுபாடு இங்கும் மிகுந்திருந்தது. பெண்கள் என்றால் நிரந்தர ஊழியர் என்ற நினைவு பல இடங்களில் இருந்து கரைந்துவிடுகின்றது. தங்களுக்கு தகுந்த இடத்திற்கான போராட்டங்கள் பெண் என்பதால் 10-20% அதிகமாவே இருக்கின்றது.
அதே போல பதவி உயர்விலும் பெண்களுக்கு குடுக்கவேண்டுமா, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை இருக்கிறது. என்றோ ஒரு நாள் இவர்கள் நிறுவனத்துக்கு அதிக உபயோகமில்லாமல் பொய் விடுவார்கள் என்ற எண்ணம் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது!

தங்கள் பணி குழுவுடனான தொடர்புகள், மேலாளர்களுடனான networking ஆகியவற்றில் சுலபமாக இயங்கும் ஆண்களுக்கு மேற்கூறிய சிரமங்களை இலகுவாக்கி இருக்கலாம்.

அதுபோல அன்றாட பணிகளில் விரும்பிய வேலையை தேர்வு செய்யவும், திறமைகளை வெளிப்படுத்தி கொண்டிருக்கவும் பெண்களுக்கு ஒரு புலப்படாத கணம்/சவால் இருக்கத்தான் செய்கிறது!


மேலாளராக கணிசமான பெண்கள் இருந்தாலும், தொழில்நுட்ப ஆய்வாளர்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்கள் மட்டுமே இருக்கின்றனர் . இதற்கான காரணங்கள் மேற்க்கூறியவைகளில்  ஏனைகளாக இருக்கக்கூடும். அப்படி இருப்பினும் இந்நிலையை களைய விவாதங்கள் மேற்கொள்ளப்படவேண்டும!

திறமைக்கு குறைவே இல்லை!எல்லா தாய்மார்களை போலவே தங்கள் குழந்தையை  தூங்க வைத்துவிட்டு smart வேலை செய்து Patents எனப்படும் அறிவு காப்புரிமை தாக்கல் செய்த பெண்களும் இங்கு இருக்கிறார்கள்; எங்களுக்கு inspiration ஆக !
திறமையில் எந்த குறைவில்லாத பெண்களுக்கும் மேற்கூறிய  சவால்கள் தொடர் சுமையாகவே இருக்கிறது !

அடுத்தது நிறுவன தலைமைகள் ; 10 தலைவர்களில் 2 பெண் தலைவர் இருக்கிறது சாத்தியமாகி இருக்கிறது. Infosys போன்ற நிறுவனங்களில், பெண் தலைவர்களுக்கு என்று ஒதுக்கீடு இருக்கிறது.
ஆரம்பநிலையில் பாதிக்கு பாதியாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை,  தலைமை பதிவிகளில் ஒருவர் கூட இல்லாத நிலைமை இருக்கிறது.
இந்த அவல நிலைய உணர்ந்த இன்போசிஸ் தலைமை, 2020 குள் 25% பெண்களை தலைமை பொறுப்புகளில் பங்கு வகிக்க வேண்டி இலக்கை நிர்ணயிட்டுள்ளது!

நிறைகள் குறைகள் என்ற நீண்ட பட்டியல் இருக்கிற கணினி பொறியாளர் பணியில் பெண்களாக நாங்கள் பயணிப்பது உற்சாக குறைவில்லாமல் இருந்துகொண்டிருக்கிறது !

குறைகள் கரைந்து போக, வாங்க ஒன்றிணைந்து கணினி அறிவியல் வளர்த்தெடுக்கும் பணிசெய்வோம்!


Sunday, February 12, 2017

வாங்க உரமாக்கலாம் - 3

வணக்கம் நண்பர்களே, உரமாக்கல் தொடரின் மூன்றாம் பகுதி இது!
முதல் இரு பகுதியிலும் ஏரோபிக் aerobic உரமாக்கல், அதாவது உயிர்வளி துணைக் கொண்டு, காற்றின் உதவியால் நிகழும் உரமாக்கல் முறைகளை பார்த்தோம்.
இந்த பகுதியில் அனிரோபிக் anerobic, அதாவது உயிர்வளியற்ற வகையில் நிகழும் உரமாக்கல் முறையை காண்போம்.

மேற்கூறியவாறு, அனிரோபிக் முறையென்பது காற்று புகாமல் நிகழும் உரமாக்கல் முறையாகும். இவ்வகையான முறைகளில் Bokashi எனப்படும் ஜப்பானிய உரப்படுத்தல் வழிமுறை சிறிய வீடுகளில் செய்ய மிக எளிமையான செயல்முறையாகும்.
வழக்கமான உரப்படுத்துதல் முறையில் காற்று புகுவதற்காக 2-3 நாட்களுக்கு ஒருமுறை உரப்பொருட்கள் கிளறப்படுகின்றன. இம்முறையில் அவ்வாறு  கிளற வேண்டிய அவசியம் இல்லை!

வீட்டின் சிறு முகப்பில் செய்யவதற்கு ஏதுவான Bokashi முறை, உரமாக்கல் முறைகளிலேயே அண்மையான முறையாகும் !

1982, ஜப்பான் நாட்டு பேராசிரியர் Teuro Higa அவர்களின் ஆராய்ச்சியை கொண்டு தொடங்கிய இம்முறை, EM  - Effective micro-organism எனப்படும் நுண்ணுயிர்களின் உதவியால் உர-மூல பொருட்கள் நொதிக்கவைக்க படுகின்றன.
Ferment என்னும் நொதித்தல் மூலம் திடக்கழிவுகள் உப்புக்கண்டம்/ஊறுகாய்  போல மாற்றப்படுகின்றன.
நொதித்தல் மூலம் brine எனப்படும் உப்பு நீர் வெளியேற்றபடும். இதனை தினசரி முறையில் பிரிக்க வேண்டும்.

bokashi உரமாக்கல் -இரட்டை படி செய்முறை கொண்டது.
முதலில் நொதித்தல் என்னும் முறையில் உர-திடபொருட்கள் நொதிக்க வைக்க படுகின்றன.
அதற்கு பின்னே உப்பு கண்டம் செய்யப்பட்ட  உர மூல பொருட்கள் , உரமாக்கல் கலனில் இடப்பட்டு மக்க வைக்கப்படும்.
மற்ற முறைகளை காட்டிலும், இம்முறையில் மிக விரைவாக உரமாக்கல் நிகழப்படும்.
Bokashi முறையில் உரமாக்க தேவையான பொருட்கள்.

1) நீர் வெளியேற வசதியான, மூடியை கொண்ட கொள்கலன் - முதல்  படியான நொதித்தல் செய்ய, இக்கலன் வேண்டும்.
2) EM - எனும் நுண்ணுயிர்கள் கலந்த bokashi மூல பொருள். தோட்ட பொருட்கள் கடைகளிலும், இணையத்திலும் bokashi கலவையை வாங்கிக்கொள்ளலாம்.




Bokashi கலவையை கலனின் அடிப்பகுதியில் தாராளமாக பரப்ப வேண்டும். சமையல் கழிவுகளை அதற்கு அடுத்த அடுக்காக சேர்த்து காற்று புகாதவாறு இவ்வுர பொருட்களை அழுத்தி மூடி வைக்கவேண்டும்.
நாள்தோறும் கழிவுகளை bokashi கலவையுடன் சேர்த்து கலனில் அடுக்கி கொண்டு வரலாம்.
ஒவ்வொரு முறையும் இக்கலவையை காற்று புகாதவண்ணம் அழுத்தமாக நெருக்கி வைக்கவேண்டும்.
இக்கலனிலிருந்து உப்பு நீரை தினந்தோறும் வெளியேற்றபட வேண்டும்.
 
2-3 வாரங்களில்  உர-மூலப்பொருட்கள் நொதிக்கப்பட்டு ஊறுகாய் போல மாறி இருக்கும்.


இவ்வகையில் உரமாக்க, காய்கறிகளோடு மாமிச எச்சங்கள் சிறிய அளவினால் ஆன எலும்பு துண்டுகளை சேர்த்து மக்க வைக்கலாம்.

2-3 வாரங்களில் ஊறுகாய் போல நொதிக்கபட்டு   கிடைக்கும் கழிவுகளை சாதாரண வகையில் உரமாக்கலாம். அவை பின்வருமாறு,
-பின் கட்டு தோட்டத்தில் 4 - 8 அங்குலம் கொண்ட குழியில் புதைத்து வைக்கலாம்.
-(அ ) மண் புழு உரமாக்கல் கலனில் இட்டுவைக்கலாம்.
-(அ ) எந்த ஒரு ஏரோபிக் உரமாக்கல் முறையிலும் சேர்த்து வைக்கலாம்.

மற்ற உரமாக்கல் முறைகளை காட்டிலும் சிறிய அளவில் செலவு தேவைப்பட்டாலும்(கலவை, காலன் போன்றவைக்கு), மிக விரைவாகவும் சக்தி நிறைந்த உரம் கிடைக்கபெறும் bokashi முறை, நகர பகுதியினரிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது!


கூடுதலாக பின்வரும் பயன்களும் கிடைக்கின்றன!


1) வீட்டில் வளர்க்கப்படும் ஆடு கோழிகளும் கூட இந்த நொதித்த உரத்தை விரும்பி உண்ணுவதாகும் கூறுகின்றனர்!
2) Brine எனும் உப்பு நீர், வீட்டின் குழாய்களின்/கழிவறையின் அடைப்புகளை நீக்க உதவும்.

சாதாரண முறையில் உரமாக்க படுவதை காட்டிலும் மிக விரைவாக,சக்திவாய்ந்த உரமாக்கல் முறையான bokashi யை செய்து  எங்களுடன் உங்கள் அனுபவங்களை பகிருங்கள்!